சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிய கட்டடத் தொகுதி திறப்பு

0

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக  அமைக்கப்பட்ட  கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவன் சிற்றம்பலத்தின் “சிற்றம்பலம் நிதியம்” ஊடாக அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியை சிற்றம்பலத்தின் பேரன் சஞ்சீவ் சிற்றம்பலம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு  திறந்து வைத்தார்.

கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் நடைபெற்ற  திறப்பு விழா நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபரான  யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஐஷ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மருத்துவர் ராஜேந்திரா உள்பட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அருட்தந்தைகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.