ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சமல் ராஜபக்ச அறிவிப்பு

0

வரும் ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடப் போவதாக மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகிய இருவரும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உள்படுத்தும் மனு மீதான கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்கு வழங்கவுள்ள நிலையில் அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிடாவிட்டால், சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பாக தான், சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும், குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இருவரும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.