ஈராக் வன்முறை – சாவு 95

ஈராக்கில் அரசுக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தது. சுமார் 4 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆங்காங்கே வன்முறைகள் வெடித்துள்ளன.

இன்றைய நிலவரத்தின்படி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தது. சுமார் 4 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர். வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!