சிரியாவுக்குள் துருக்கி அத்துமீறும் – எர்டோகன்

0

சிரியாவில் செயற்படும் சிரிய ஜனநாயகப் படையினருக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்தார்.

இது குறித்து எர்டோகன் விடுத்துள்ள அறிவிப்பில், ‘எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள, அமெரிக்கா ஆதரவளிக்கும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல் தரை வழியாகவும், வான்வழியாகவும் இருக்கலாம். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் என்று கருதும் தீவிரவாதக் குழுக்களை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகிறோம்’ என்றார்.