சொந்த மண்ணில் இலங்கையிடம் மண்கௌவியது பாகிஸ்தான்

0

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி-20 போட்டியில் 64 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது இலங்கை அணி. பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 10 முக்கிய வீரர்கள் விலகிய நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் இலங்கை அணி துடுப்பெடுத்தாடப் பணித்தார். இலங்கை அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

குணதிலக 150 என்ற சராசரியில் 57 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலளித்து விளையாடிய பாகிஸ்தான் அணி 101 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது.

பந்துவீச்சில் உதான, பிரதீப் தலா மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். குணதிலக ஆட்டநாயகனாகத் தெரிவானார்.