பாண்டியாவுக்கு சத்திரசிகிச்சை

0

முதுகுக் காயத்துக்கு லண்டனில் சத்திரசிகிச்சை செய்து கொண்டார் இந்திய அணியின் சகலதுறை வீரர் பாண்டியா. இன்னும் 5 மாதங்களுக்கு கட்டாய ஓய்வில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த பாண்டியா, ‘சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்கள் ஆசிகளுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த ஐ.பி.எல் தொடரிலேயே பாண்டியா களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.