ஈராக் வன்முறை: 100 பேர் சாவு

0

ஈராக்கில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்தது.

ஈராக் அரசுக்கு எதிராக தற்போது பெரும் போராட்டம் அங்கு இடம்பெற்று வருகிறது. ஊழல், வேலைவாய்ப்பின்மை ஆகியன இந்தப் போராட்டத்தைத் தோற்றுவித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதுவரை சுமார் 100 பேர் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் உயிரிழப்புத் தொடர்பில் ஐ.நா சபை ஈராக் அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.