யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகத்தில் கலாநிதிகள் மூவர் தெரிவு

0

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு (Jaffna College Alumni Association) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதிகள் இருவர் தலைவர், செயலாளர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், நிறைவேற்றுக் குழுவிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துறைத் தலைவரான கலாநிதி ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை கல்லூரியில் ஒட்லி மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் நடப்பு வருட தலைவர் எஸ்.ஜே.நிரோஷன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.அதிசயதாசன் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணித, புள்ளிவிவரவியல் மூத்த விரிவுரையாளர் கலாநிதி இராஜசிங்கம் பிரசாந்தன் தலைவராகத் தெரிவானார். செயலாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் தெரிவானார்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீட கணினி பொறியியல் துறை தலைவர் கலாநிதி ஆனந்தராஜா கணேஸ்வரன், நிறைவேற்றுக் குழு உறுப்பினராகத் தெரிவானார்.

கல்லூரியின் புதிய நிர்வாகம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணக் கல்லூரியில் பழைய வாய்ந்ததாகக் காணப்படும் இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் விரிவுரை மண்டபங்களில் ஒன்றை இடித்துவிட்டு வகுப்பறை அமைக்கும் கல்லூரி நிர்வாகத்தினம் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரேரணை ஒன்று கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பழைய மாணவர்களால் நிறைவேற்றப்பட்டது.