ரயில் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும் – தொழிற்சங்கம் அறிவிப்பு

0

தொடருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழமைக்குத் திரும்பும் என்று ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் தொடர்ச்சியாக 12 நாள்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தொடருந்து சேவைகள் முடங்கின.

சில அலுவலக தொடருந்து சேவைகள் மட்டும் இடம்பெற்ற நிலையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஊழியர்கள் 12 நாள்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் 192 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழமைக்குத் திரும்பும் என்று ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.