ஈராக் வன்முறை – உயிரிழப்பு 122

0

ஈராக்கில் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள பெரும் கலவரத்தால் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னரும்கூட அந்த நாட்டில் அமைதி திரும்பவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக அங்கு பரவலாகப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன.

அரசில் நிலவும் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிவற்றுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஈராக்கில் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களால் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலவரம் மேலும் தீவிரமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.