ஐ.நாவில் பணம் இல்லை – குர்தேரஸ் கவலை

0

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டொலர் பணப் பற்றாக்குறையுடன் செயற்பட்டு வருகின்றது. இந்த மாத முடிவுக்குள் பணம் முற்றிலும் இல்லாமல் போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ்.

இதுகுறித்து குத்தேரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019ஆம் ஆண்டில் ஐ.நா சபைக்குத் தேவைப்படும் நிதியில் வெறும் 70 சதவீதத்தை மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் காரணமாக 230 மில்லியன் டொலர் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்துக்குள் பணம் முற்றிலும் இல்லாமல் போகலாம். எங்களது நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான பொறுப்பு உறுப்பு நாடுகளிடம்தான் உள்ளது’ என்றார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான நிதியில் 22 சதவீதத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.