சிவாஜி, அனந்திக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தல்!

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அனந்தி சசிதரனுக்கும் தனக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனடிப்படையிலேயே அவர்கள் இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு, தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இன்று அல்லது நாளை வழங்கப்படும் என்று அறிய முடிகிறது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!