ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கிறார் மைத்திரி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித. தேர்தல் முடியும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கவும் முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதையடுத்து. ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை- நவம்பர் 17ஆம் நாள் வரை, பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாசவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராகவும் அவர் நியமித்துள்ளார்.

பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாச, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கான ஒழுங்குகளை  கவனிப்பார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே மேற்கொள்ளும், எனினும் பொதுஜன பெரமுனவின் மேடையில் பரப்புரைகளை மேற்கொள்ளாது.

எனினும் இன்று அனுராதபுரவில் நடக்கும் கோத்தாபய ராஜபக்சவின் முதல் பரப்புரைக் கூட்டத்தில், துமிந்த திசநாயக்கவும், வீரகுமார திசநாயக்கவும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த  எதிர்பாராத முடிவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.