ஜனாதிபதித் தேர்தலில் வென்றவுடன் சிறைகளிலுள்ள முப்படையினரை விடுவிப்பேன் – அ’புரத்தில் கோத்தாபய உறுதி

0

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முப்படையினர் அனைவரையும் விடுதலை செய்வேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பரப்புரைக்கூட்டம் இன்று (ஒக்.9) அநுராதபுரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதிலேயே இந்த அறிவிப்பை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டார்.

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 17ஆம் திகதி காலை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முப்படையினர் அனைவரையும் விடுவிப்பேன்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வேன். அத்துடன், விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.