ஜனாதிபதித் தேர்தல் பந்தயம் ஆரம்பம்; எக்கநாயக்க குத்துக்கரணம்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி. எக்கநாயக்க, கடந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கௌ ஆதரவளித்த நிலையில் இன்று கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்தது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி. எக்கநாயக்க குத்துக்கரணம் அடித்து தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்குவதாக இன்று மாலை அறிவித்தார்.