திட்டமிட்ட விளம்பரப்படுத்தலில் ஈடுபடுகிறாரா மெஸ்ஸி?

0

ஆர்ஜென்ரீனா அணியின் தலைவரான மெஸ்ஸி, தான் ஒப்பந்தமாகியுள்ள நிறுவனம் ஒன்றுக்காகத் திட்டமிட்ட விளம்பரப்படுத்தலில் ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி போன்ற ஜாம்பவான் வீரர்கள் மீது களத்தில் எந்தநேரமும் அனைவரினதும் பார்வையும் இருக்கும். அவர்களின் செயற்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் அதீத விளம்பரப்படுத்தல்களிலும் ஈடுபடுவார்கள்.

பிரேசில் அணியின் தலைவர் நெய்மர் களத்தில் அடிக்கொருதடைவை காலணியின் நூல்களை அவிழ்த்துக் கட்டும் பழக்கம் உடையவர். இது அவர் தான் ஒப்பந்தமாகியுள்ள காலணி நிறுவனத்தை பிரபல்யப்படுத்தும் செயற்பாடு என்று விமர்சிக்கப்பட்டது. தற்போது அதே வகையான செயற்பாடுகளை மெஸ்ஸி மேற்கொள்கின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.