மருத்துவத்துக்கான நோபல் மூன்று பேருக்குப் பகிர்வு

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட 3 நபர்களுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வருடம் மருத்துவத் துறைக்கான நோபல் எவருக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜி கெலின், சர் பீட்டர் ரேட்கிளிப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல், கிடைக்கும் ஒக்சிஜனின் அளவை பொறுத்து செல்களை எவ்வாறு தகவமைத்து கொள்கிறது என்பதை கண்டுபிடித்ததற்காக இந்த 3 மருத்துவர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!