விடுதலைப் புலிகளின் சீருடை, தொப்பி வைத்திருந்த சாட்டுதலில் வட்டுக்கோட்டை இளைஞன் கைது

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று வவுனியா  பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை (ரிசேட்) மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி   மீட்கப்பட்டன.

வட்டுகோட்டை தெற்கை சேர்ந்த துரைசிங்கம் றஜிவன் (வயது- 25) என்பவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.