இலக்கியத்துக்கான நோபல் அறிவிப்பு

0

2018ஆம், 2019ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டை சேர்ந்த நாவலாசிரியர் ஒல்கா டோகார்ஸக் என்ற பெண் எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலக்கியத்துறைக்கு வாழ்வின் எல்லை கடந்து ஆற்றிய பணிகளுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 15ஆவது பெண் இவர் ஆவார்.

அதுபோலவே 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்ஹே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனித அனுபவத்தின் தனித்துவத்தை மொழியில் கூர்மையுடன் ஆராய்ந்தவர் பீட்டர் என சுவீடன் நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு இலங்கை மதிப்பில் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியுடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here