கோலி சதம்

0

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி சதம் கடந்தார்.

இந்தப் போட்டி நேற்று ஆரம்பமானது. நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 273/3 என்று இருந்தது. கோலி 63 ஓட்டங்களுடன் இரண்டாம் நாளுக்காக இன்று களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் சதத்தை நிறைவு செய்தார்.

மறுமுனையில் இந்திய அணியின் உபதலைவர் ரகானே அரைச்சதம் கடந்து தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகின்றார்.