கோலி 254: இந்தியா 601/5 டிக்ளேர்

0

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவிக்க இந்திய அணி 601/5 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

நேற்;று இந்த ஆட்டம் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நேற்று அந்த அணி 273/3 என்ற நிலையில் இருந்தது. இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது இந்தியா.

கோலி 63 ஓட்டங்களுடனும், ரகானே 18 ஓட்டங்களுடனும் களமிறங்கினர். ரகானே 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணை சேர்ந்த ஜடேயா, கோலி 225 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.

இந்தியா 601 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஜடேயா 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி டிக்ளேர் செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவித்தார்.