சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு

0

பிரபல சாக்ஸபோன் வாத்திய கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 11) காலமானார். 

மறைந்த கர்தி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1949 டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 

திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றியவர் கத்ரி கோபால்நாத். டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கர்தி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது.

ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்சுடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005ஆம் ஆண்டில் கின்ஸ்மென் இசைக்தொகுப்பை வெளியிட்டார்.

பட்டங்கள்: சாக்ஸபோன் சக்ரவர்த்தி, சாக்ஸபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.