கிளிநொச்சியில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு – திருமலையில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலில்

0

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் ரவைகள் கைப்பற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கந்தளாயில் கைத்துப்பாக்கியுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் போராளியுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.

இந்த நடவடிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை (ஒக்.12) பிற்பகல் முன்னெடுத்தனர்.

கந்தளாயில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்பாள்குளம் பகுதியில் உள்ள வீடு தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

அங்கு 3 கைத்துப்பாக்கிகள், ஒரு ரி56 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி ரவைகள் -45, ரி56 துப்பாக்கி ரவைகள் -150, 5 கைக்குண்டுகள், மடிகணினி ஒன்று, 4 அலைபேசிகள், எம்.கே.எம்.ஜி ரவைகள்- 07, வெடிப்பி வயர், வெடிப்பிகள் – 4
ஜிபிஎஸ் – 1, பற்றறி சார்ஜர் -1 மற்றும்
தானியக்கி கருவிகள் ஆகியன மீட்கப்பட்டன.

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.