ஜப்பானை நெருங்குகிறது ஹகிபிஸ்

0

ஜப்பானை நோக்கி ஹிகிபிஸ் புயல் நெருக்கி வருகின்றது. மணிக்கு சுமார் 180 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் பெரும் அழிவுகளை அது ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிமுதல் புயல் ஜப்பானைக் கடுமையாகத் தாக்கும் என்று கருதப்படுகின்றது. புயல் காரணமாக சுமார் 2 ஆயிரம் வானூர்திச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஹகிபிஸ் புயலானது 1958ஆம் ஆண்டு 1,269 பேரை பலி வாங்கிய இடா புயலைப் போன்று சக்திவாய்ந்ததாக இருக்கும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.