பளுதூக்கலில் ஆசிகா சாதனை

0

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வி.ஆசிகா 3 புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

இலங்கை தேசிய மட்ட திறந்த வயதுப் பிரிவினருக்கான பெண்களிற்கான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பு டொறிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றன.

இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா 64 கிலோ எடைப் பிரிவில் சினெச் முறையில் 77 கிலோ பளுவையும் மற்றும் கிளின் அன் ஜக் முறையில் 98 கிலோ பளுவையும் தூக்கினார்.

அவர் ஒட்டுமொத்தமாக அடிப்படையில் 175 கிலோ பளுவைத் தூக்கி 3 சாதனைகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.