பிள்ளையானின் கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவு

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் எஸ்.சந்திரகாசன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் எஸ்.சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் 2015ஆம் ஆண்டு தொடக்கம்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்தக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 42 வாக்குகளைப் பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.