275 ஓட்டங்களில் தென்னாபிரிக்கா அவுட்

0

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 275 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது தென்னாபிரிக்கா.

நேற்றுமுன்தினம் இந்த ஆட்டம் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவித்தார். அகர்வால் 108 ஓட்டங்களையும், ஜடேயா 91 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பதிலுக்குக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய நாள் முடிவில் 36/3 என்றிருந்தது. இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 275 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது.

பத்தாம் நிலை வீரர் மகாராஜ் 72 ஓட்டங்களைச் சேர்த்தார். பிளசி 64 ஓட்டங்களையும், பிளன்டர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸ்வின் 4, உமேஸ் யாதவ் 3, சமி 2, ஜடேயா 1 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.