துருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்

0

வடகிழக்கு சிரியாவில் குர்து படையினர் மீது துருக்கி கொடூரமான தாக்குதல் நடத்திவருவதால் கடந்த மூன்று நாள்களில் ஒரு லட்சத்து 30,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க துருப்புக்களை எல்லையிலிருந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை துருக்கியின் ராணுவ ஊடுருவல் தொடங்கியது. இதனால் சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐ.நா. வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.