தென்னாபிரிக்கா பொலோஒன்

0

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது பொலோஒன் செய்து வருகின்றது தென்னாபிரிக்கா.

கடந்த 10ஆம் திகதி இந்த ஆட்டம் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவித்தார். அகர்வால் 108 ஓட்டங்களையும், ஜடேயா 91 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பதிலுக்குக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய நாள் முடிவில் 275 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. இதனால் அந்த அணி இன்று பொலோஒன் செய்ய வைக்கப்படுமா அல்லது இந்தியா துடுப்பெடுத்தாடுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பொலோ ஒன்றுக்காக பணிக்கப்பட்டது தென்னாபிரிக்கா.

சற்றுமுன்னர் வரையில் தென்னாபிரிக்க அணி 35/2 என்ற நிலையில் உள்ளது. மார்க்ரம், பேர்ண் இருவரும் ஆட்டமிழந்துள்ளனர்.