இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

பல்கலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பணி நாளை மீள ஆரம்பம்

0

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன அறிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும முதல் சுற்றுத் தெரிவு முடிவுற்று வெற்றிடங்களை நிறைவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1157

மருத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.

இரத்தினபுரி – குளியாப்பிட்டிய புதிய மருந்துவ பீடங்கள் ஆரமபிக்கப்படுவதுடன், மருத்துவ கற்கை நெறியைத் தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ பீடங்களுக்குத் தேவையான கட்டட வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன  தெரிவித்தார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here