இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

பல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், கட்சிகளின்பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு சற்று முன்னர் யாழ்ப்பாணபல்கலைக் கழகத்துக்கு அண்மையாகவுள்ள ப்ரைட் இன் விடுதியில் ஆரம்பமாகியது. 

இந்தச் சந்திப்பில்  யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்
புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ. கஜேந்திரகுமார் , செயலாளர் செ.கஜேந்திரன் , சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்  ஆகியோரும்,

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

ஈ.பீ.ஆர்.எல்.எவ்சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோரும் ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன்ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இன்றைய சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ். ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here