வழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது

0
புதிய நிர்வாகம்

வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்துக்கு சுற்று மதில் அமைத்த உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் சங்கத்துக்கு புதிய நிர்வாக சபை கடந்த 6ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் புதிய தலைவராக வி.தபோதரனும் உப தலைவராக சிவலிங்கம் கேதீஸ்வரனும் செயலாளராக கு.நடேஸ்வரனும் உப செயலாளராக ரி.சுரேந்திரனும் பொருளாளராக ப.ஸ்ரீறிதரனும் தெரிவாகியதுடன் 14 நிர்வாக சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகத்தால் வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மயான எல்லை நிர்ணயத்து வலி.மேற்கு பிரதேச சபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், எல்லை நிர்ணயம் நிறைவடைந்ததும் சுற்று மதில் அமைக்கும் பணி இடம்பெறவுள்ளது.

அத்துடன், மயானத்தில் தகனம் செய்வதற்கான மேடை, அஸ்தி கரைப்பதற்கு வழுக்கையாறு வாய்க்காலுக்குச் செல்வதற்கான பாதை மற்றும் கிணறு சீரமைத்தல் ஆகியன முதல் கட்டப்பணிகளாக முன்னெடுக்கப்படுகின்றன.

மயான கட்டணமாக ஆயிரம் ரூபா அறவீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.