கஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்

0

கிளிநொச்சி இந்துபுரத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அந்த இடத்துக்குச் சென்றிருந்தனர். ஜூப் ஒன்று அங்கு பயணித்தது. அதில் கஞ்சா கடத்தப்படுவதாக சந்தேகித்து அதனை பொலிஸார் மறித்தனர். எனினும் அது நிறுத்தாமல் சென்றது.

தமது சமிஞ்சையை மதிக்காமல் சென்றதாக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் போது ஒருவர் படுகாயமடைந்தனர்.

அதன் பின்னர் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனத் தெரியவந்த்து” என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர்  கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

“சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுவரித் திணைக்களத்தினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினர் தனியாரிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த வாகனத்தில் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மேலும் புதிய ரக வாகனம் ஒன்றிலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை அறிந்து கொண்ட பொலிஸார், அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

இதன்போது குறித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நிலையில் வாகனத்தை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது மதுவரி திணைக்களத்தினரால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அந்தக் கார் ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் வெடித்த மற்றும் வெடிக்காத துப்பாக்கு ரவை கூடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுவரித் திணைகள உத்தியோகத்தர்கள் அதிகாலை வேளை அந்தப் பகுதிக்கு கடமையின் நிமிர்த்தம் வந்தனரா? என்று திணைக்கள மட்ட விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.