தமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நலன்கருதி இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) தெரிவித்தார்.

வரும் நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு வேட்பாளர்களுக்கான ஆதரவையும் ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், 2018 ஒக்ரோபர் அரசியல் புரட்சியின் போது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பக்கம் தாவி பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றார். எனினும் அந்த அரசு 52 நாள்களில் கவிழ்ந்த்து.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முற்போக்கு தமிழர் அமைப்பு என்ற அமைப்பின் ஊடாக தனது அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.