இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு

0

தமிழ் பாரம்பரிய கலைகள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வவுனியாவில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

வவுனியாவை சேர்ந்த அ. நிலா எழுதிய இந்த நூலினை தமிழியல் வித்தகர் கலாநிதி அகளங்கன் பிரதம விருந்தினராகவும் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிஷோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தனர்.

“அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்தும் நோக்குடனும், அக்கலைகள் தொடர்பில் தற்போதுள்ள சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்குடனேயே இந்த நூலினை தொகுத்துள்ளேன்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

முதல் பாகமாகவே இந்த நூலினை தற்போது வெளியிட்டுள்ளேன், மிக விரைவில் அடுத்த பாகத்தினை வெளியீடு செய்வதற்கும் முயற்சிகளை முன்னேடுத்துள்ளேன்.

அழிந்து வரும் கலைகளை ஆவணப்படுத்துவது மாத்திரம் எனது நோக்கில்லை. அழிந்து வரும் கலைகளை அழிவில் இருந்து காப்பதுமே. அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலைஞர்களுடன் உரையாடல்களை தொடங்கியுள்ளேன்” என்று நூலாசிரியரான செல்வி. அ . நிலா தெரிவித்தார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here