யாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு

0
ஈழத்து சீரடி ஆலயம் என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை  சீரடி நாதனை போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய “மடத்தார்பதி வாழ் மன்னவனே” எனும் இசைப்பேழை வெளியிடப்படது. இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலர் சி.சத்தியசீலன்  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இறுவெட்டை வெளீயிடு செய்து வைத்தார். நிகழ்வில் விருந்தினர்களாக சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ,வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ந.விஐயசுந்தரம், சிறி நதியா குழுமத்தின் தலைவர் நடராசா சத்தியரூபன் உள்பட சீரடி சாய் பக்தர்களும் கலந்து கொண்டு இறுவெட்டு பிரதியை பெற்றுக்கொண்டனர்