யாழ். பல்கலை. மாணவர்களால் மரம் நடுகை

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மரநடுகை விழா இடம்பெற்றது.

“வாழ்வு வளம் பெற மரம் நாட்ட கரம்” சேர்ப்போம் எனும் தொனிப்பொருளில் வலிகாமம் வடக்கு, மயிலிட்டி வடக்கு கலைமதி வித்தியாலயத்தில் இந்த மரநடுகை விழா இடம்பெற்றது.

போர் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக இந்தப் பகுதி உள்வாங்கப்பட்டிருந்து.

1990 ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 18 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு அந்தப் பகுதி மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

போர் முடிவடைந்து 10 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் கடந்த மே 6 ஆம் திகதி பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

தற்போது சுமார் 40 பரப்பு பாடசாலைக்கு சொந்தமான காணி விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சில பரப்பு காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here