சிரியாவுக்குள் மீண்டும் அமெரிக்கப் படை

0

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்மாத தொடக்கத்தில் அறிவித்த நிலையில் 500 அமெரிக்க வீரர்கள் மீண்டும் சிரியா திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து சிரியா கண்காணிப்பு குழு கூறும்போது, ‘சிரியாவின் வடக்குப் பகுதியில் அல் வாலித் எல்லைப் புறத்தில் சுமார் 85 வாகனங்கள் 500 அமெரிக்க வீரர்களுடன் சென்றன. மேலும் கடந்த ஐந்து நாட்களாக அமெரிக்க ராணுவ விமானங்கள் பல வடக்குப் பகுதியில் தரையிறங்கி உள்ளன’ என்றுள்ளது.

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அறிவித்த நிலையில் அமெரிக்க படைகள் சிரியா விரைந்துள்ளனர். பக்தாதியைக் கொல்வதற்கு துருக்கி மற்றும் சிரியாவின் உதவியைப் பெறவே அமெரிக்கா பின்வாங்கியது என்ற கருத்தும் பொதுவாக உள்ளது.