பொறுமை காக்கவும் – தேர்தல்கள் ஆணையாளர் கோரல்

0

“ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன. எனவே போலித் தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம். பொறுமை காக்கவும்”

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

“வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பொறுமை காக்கவும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here