நிதி அமைச்சர் பதவியிலிருந்து மங்கள விலகல்

0

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இன்று காலை தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்ட மங்கள சமரவீர “அன்புள்ள தனது நாட்டுக்காக அழுவதாகத் தெரிவித்திருந்தார். புத்த பிரான் நாட்டை ஆசிர்வதிக்கவேண்டும் என்றும் அவர் பிராத்தித்தார்.

அத்துடன், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு விளையாட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.