யாருக்கு வாக்களித்தீர்கள்? தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்

0

கேகாலை, எட்டியந்தோட்டை பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று யாருக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்டுவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் எட்டியந்தோட்டைபொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் இன்று இரவு நுழைந்த கும்பல், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று அச்சுறுத்திவிட்டு தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுட்டது.

அத்துடன், பெண் பிள்ளைகளிடம் அநாகரிகமாக கும்பல் நடக்க முயற்சி செய்ததாக மக்கள் பொலிஸாரிடம் அச்சத்துடன் தெரிவித்தனர்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழர்களின் சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத், இது அயலவர்களுக்கு இடையேயான மோதல் என அவர்களது பாணியில் தெரிவித்தார்.

இலங்கை சோசலிச குடியரசின் 7 வது ஜனாதிபதியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கோத்தாபய ராஜபக்ச இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறுபான்மையினரிடம் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு ஜூலை போன்ற ஒரு நிலையை இந்தச் சம்பவம் ஞாபகப்படுத்தியுள்ளது என்று சமூக ஊடங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.