சஜித்தான் எதிர்கட்சித் தலைவர் – ஐதேகவின் 47 எம்.பிக்கள் சபாநாயகருக்குக் கடிதம்

0

நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 47 பேர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.