பிரதமரானார் மகிந்த

0

நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி செயலகத்தின் இன்று (நவ.21) பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் மகிந்த ராஜபக்ச உறுதியுரை எடுத்து பதவியேற்றுக் கொண்டார்.

இந்த பதவியேற்பு வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்று மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அத்துடன், கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், இடைக்கால அரசின் அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படவுள்ளது. இந்த அமைச்சரவை மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் பொதுத் தேர்தல்வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.