ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க சபாநாயகருக்கு ஐதேக கடிதம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவரும் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் இந்தக் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் தான் தொடரலாமா அல்லது புதிய தலைவரை நியமிப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் நால்வர் கொண்ட தலைமைத்துவக் குழுவை ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என்று சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், ஹரீன் பெர்ணான்டோ ,நவீன் திசாநாயக்க ஆகியோர் கொண்டே குழுவையே ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.