இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

வலி.வடக்கு பிரதேச சபையின் 17 தீர்மானங்கள் மேலதிக வாக்குகளால் நிராகரிப்பு

0

வலி.வடக்கு பிரதேச சபையில் கடந்த அமர்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பிற்கு விடாமலே நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டன.

வலி.வடக்கு பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான பொது கூட்டம் இன்று சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

“கடந்த ஒக்டோபர் மாதம் சபை அமர்வின் போது ஏற்பட்ட குழப்பமான நிலையால் சபை மண்டபத்திற்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இதனால் சபை கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில், உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்களையும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

சபையின் அனைத்து உறுப்பினர்களும் இல்லாத சமயம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அவற்றை நிராகரிக்கின்றோம்” என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உறுப்பினர்களின் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானத்தையும், ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற வாக்கெடுப்பு சபை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.

இதன் போது 17 தீர்மானங்களையும் தாங்கள் நிராகரிப்பதாக 18 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இருப்பினும் 17 தீர்மானங்களையும் நிராகரிக்க கூடாது என்று சபையில் இருந்த 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இரண்டு மேலதிக வாக்குகளால் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here