பாதுகாப்பு அமைச்சர் யார்? குழப்பம் நீடிப்பு

0

பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுத் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு மகிந்த ராஜபக்சவிடம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு அமைச்சு எவரும் பதவியேற்கவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவி இருக்க முடியாது என்ற உரையின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி, அமைச்சுப் பதிவி எதனையும் எடுத்துக்கொள்ளவில்லையா என்று கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here