பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சும் பிரதமர் மகிந்தவிடம்

0

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வழங்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதிகளிடமிருந்த பாதுகாப்பு அமைச்சு முதன்முறையாக பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் முக்கிய அமைச்சுக்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் உள்ளது.

பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு, நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் திட்டமிடல், புத்த சாசனம், கலாசார அபிவிருத்தி, சமய விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், மற்றும் வீடமைப்பு அமைச்சராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.