வடக்குக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

0

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் இன்று (நவ.29) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.தேவி தொடருந்து பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை தொடக்கம் காங்கேசன்துறை – கொழும்பு இடையேயான தொடருந்து சேவைகள் நேற்றிரவு முதல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.