மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரை

0

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி வரும் 20ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ள நிலையில் அவரது இடத்துக்கு புதிய ஆளுநராக நியமிப்பதற்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் பலர் அந்த நிறுவனத்திலேயே படிப்படியாக பதவி உயர்வுடன் வந்தவர்களாகவே இருந்தனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னணி தொழிலதிபர் சுனில் மெண்டிஸை ஆளுநராக நியமித்ததன் பின்னர் வெளியாட்கள் மத்திய வங்கி ஆளுநராக உள்வாங்கப்பட்டனர்.

இந்த நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிப்பதற்கு தற்போதைய பிரதி ஆளுநர் நந்தலாலா வீரசிங்க, முன்னாள் பிரதி ஆளுநர்கள் ராணி ஜெயமக, சி.பி.ஜே.சிறிவர்த்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க இலங்கை மன்றக் கல்லூரியின் முன்னாள் தலைவர் ராஜித பண்டாரவின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here