பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு மீள ஆரம்பம்

0

பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு இன்று மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசு கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்குவதற்கு இந்தப் பிரிவு மீளவும் திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பு 3இல் 101, ஆர்.ஏ டீ மெல் மாவத்தையில் இந்தப் பிரிவுக்கான அலுவலகத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்துக்கு பொது மக்களால் வழங்கப்படும் மனுக்கள் – முறைப்பாடுகள் தொடர்பில் உரிய அரச உயர் மட்டத்துக்கு தகவல் வழங்கப்படும் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, “மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறப்பதன் முக்கிய நோக்கம், பொருத்தமான அரசு நிறுவனத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பொது மக்களின் வியங்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதாகும்.

ஏராளமான மக்கள் தினமும் வந்து தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்னை சந்திக்கிறார்கள். எனவே இந்த அலுவலகம் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு 2017ஆம் ஆண்டு முன்னைய அரசால் இதே முகவரியில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.